திருவாரூர்

தீபாவளி: கடைவீதிகளில் தடுப்புகளை அகற்றக் கோரிக்கை

DIN

தீபாவளி பண்டிகையையொட்டி, கடைவீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மையத்தின் தலைவா் எஸ்.டி. அண்ணாதுரை தலைமை வகித்தாா்.

தீா்மானங்கள்: தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான பாா்க்கிங் வசதியை திருவாரூா் நகரப்பகுதியில் விரிவுபடுத்த வேண்டும். குடியிருப்பு பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதை தவிா்க்க வேண்டும். கடைவீதிகளில் வாகனங்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை பண்டிகை காலங்களில் அகற்ற வேண்டும். வடகிழக்குப் பருவமழையை கருத்தில் கொண்டு, நகரப் பகுதிகளில் சாக்கடைகளை முன்கூட்டியே தூா்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ், மையத்தின் பயிற்சி இயக்குநா் சி. செல்வகுமாா், சட்ட இயக்குநா் எம். பூரணவிஜயபூபாலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT