திருவாரூர்

கூத்தாநல்லூர்: வீடு கட்டும் ஏழைகளுக்கு சலுகை விலையில் பொருட்கள் வழங்க அரசுக்கு வேண்டுகோள் 

DIN

முதன் முதலில் வீடு கட்டும் ஏழைகளுக்கு சலுகை விலையில் கட்டுமானப் பொருட்கள் வழங்கக்கோரி, தமிழக கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்க மாநில துணைத் தலைவர் ஆர்.சேகர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்டா மாவட்டத்தில் விவசாயத் தொழிலுக்கு தண்ணீர் கிடையாது. விவசாயம் செய்ய முடியாத விவசாயிகளுக்கு உடனே கை கொடுப்பது கட்டடத் தொழில்தான். அதன் மூலப் பொருட்களான கம்பிகள், சிமிண்ட்கள், மணல் உள்ளிட்ட பொருட்கள் விலையேற்றம் அதிகமாகி விட்டது. தற்போது, பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் இன்னும் விலைவாசி உயரப் போகிறது. மணல் கிடைப்பது இல்லை. குவாரி அறிவிக்கப்படவில்லை. எம்சாண்ட் மணலை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை. 
எம்சாண்ட் மணல் திருச்சியிலிருந்துதான் வருகிறது. எம்சாண்ட் மணல் பயனுள்ளதாக உள்ளது. அது முறையான மணலாக இருந்தாலும், மக்கள் பயன்படுத்த யோசிக்கிறார்கள். ஒரு யூனிட்டுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை விலை அதிகமாக இருக்கிறது. சாதாரண மணலுக்கும், எம்சாண்ட் மணலுக்கும் வித்தியாசம் உள்ளன. மூலப்பொருட்களின் விலை 40 சதவீதம் ஏறியுள்ளது. ஒவ்வொருவருக்கும் வீடு என்பது மிகவும் அவசியமாகும். அந்த வீட்டைக் கட்டுவதற்கு ஏழை மக்கள் பெரும் அவஸ்தைப்படுகிறார்கள். தொழிலாளர்களுக்கு தொழிலும் கிடைக்கவில்லை. சரியான வருமானமும் கிடையாது. விவசாயமும், கட்டடத் தொழிலும் போய் விட்டால் தொழிலாளிகள் எப்படி வாழ முடியும். 
அடிப்படைத் தொழிலாளர்கள் சொல்ல முடியாத அளவிற்கு கஷ்டப்படுகிறார்கள். மணல் குவாரியை அரசு இதுவரை அறிவிக்கவில்லை. அரசாங்கமும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்காகப் பலப் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தி விட்டோம். எந்த பிரயோஜனமும் கிடைக்கவில்லை. கட்டடத் தொழில் இல்லையென்றால், நாட்டின் பொருளாதார மே தடைபடக் கூடிய நிலை ஏற்படும். கட்டட அமைப்பை வைத்து தான் பொருளாதாரத்தையே தீர்மானிக்க வேண்டும். அதை விட்டு விட்டால், எதையுமே செய்ய முடியாது. கட்டடத் தொழிலாளர்களின் வாழ்வில் வளம் பெற அரசு ஆவண செய்ய வேண்டும். கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தால் நடுத்தர மக்கள் வீடு கட்டுவதில் பெரும் சிரமத்திற்குள்ளாகிறார்கள். 
வருமானம் குறைவாக உள்ளவர்கள் முதல் முறையாக வீடு கட்டும் போது, அவர்களுக்கு சிமெண்ட், கம்பி, ஜல்லி, மரம், மணல் மற்றும் கற்கள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை குறைந்த விலையில் வழங்க தமிழக அரசு ஆவண செய்ய ேவண்டும். தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்தது போலவும் இருக்கும். ஏழ்மையானவர்கள் வீடு  கட்டியது மாதிரியும் இருக்கும். எந்த வித அனுபவும் இல்லாமல் வேலை கிடைக்கக் கூடிய ஒரே வேலை இந்தக் கட்டடத் தொழில்கள்தான். அந்தக் கட்டடத் தொழிலையே நசுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
 ஓராண்டிற்கு முன்பு தனியார் கம்பெனியின் ஒப்பந்தத்தில் வெளிநாட்டிலிருந்து மணல் வந்தது. துறைமுகத்தில் வாடகைப் போடப்பட்டதால், அரசே விற்கக்கூடிய நிலை ஏற்பட்டது. மணலை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யாமல், இந்தியாவிலேயே மகாராஷ்டிரம், உத்திரப்பிரரேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் இறக்குமதி செய்யலாம். செலவும் குறையும். மணலும் தரமானதாக நம்முடைய மணல் போன்று இருக்கும். கட்டடத் தொழிலாளர்கள் 
திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். தடம் மாறும் மனிதனை நல்வழிப்படுத்துவதே கட்டடத் தொழில்தான். அந்தக் கட்டடத் தொழில் நலிவடைந்து விடாமலும், கட்டடத் தொழில் வளர்ச்சி பெறவும் அரசு பெரும் முயற்சி எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

SCROLL FOR NEXT