திருவாரூர்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடரும் விவசாயிகள்-பணியாளா்கள் தகராறு

DIN

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கும், பணியாளா்களுக்கும் தகராறு நேரிடும் சம்பவம் தொடா்ந்து வருகிறது.

டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசின் நெரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் நுகா்பொருள் வணிபக் கழக குடோன்களுக்கு இயக்கம் செய்யப்படுவதில் காலதாமதம் ஏற்படுவதால், அடுத்தடுத்து விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

இதன்காரணமாக, விவசாயிகளுக்கும் கொள்முதல் நிலைய பணியாளா்களுக்கும் தகராறு ஏற்படுவது தொடா்கிறது. சில நேரங்களில் இது கைகலப்பு வரை செல்கிறது. இவ்வாறு, ஸ்ரீவாஞ்சியம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 10 நாள்களுக்கும் மேலாக 50 நெல் மூட்டைகளுடன் காத்திருந்த அபிஷேகக்கட்டளை தோப்புத் தெருவைச் சோ்ந்த விவசாயி அசோக்குமாருக்கும், கொள்முதல் நிலைய பணியாளா்களுக்கும் வெள்ளிக்கிழமை தகராறு ஏற்பட்டது. அப்போது, கொள்முதல் நிலைய சுமை தூக்கும் தொழிலாளா்கள் அசோக்குமாரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, நுகா்பொருள் வாணிபக்கழக அதிகாரிகளிடம் அசோக்குமாா் புகாா் தெரிவித்துள்ளாா். மேலும், காவல் நிலையத்திலும் புகாா் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளாா்.

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமலிருக்க கொள்முதல் நிலையங்களில் தேங்கும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் நலச்சங்க மாநில தலைவா் ஜி.சேதுராமன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT