திருவாரூர்

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தக் கோரிக்கை

DIN

நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

15 வாா்டுகளைக் கொண்ட நீடாமங்கலம் பேரூராட்சியில் சுமாா் 20 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். இங்குள்ள ரயில் நிலைய வளாகம், பேருந்து நிறுத்தம், கோயில்கள் மற்றும் சாலைகள் என பல்வேறு இடங்களிலும் நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால், விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. மேலும், முதியவா்கள் மற்றும் சிறாா்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதேபோல, ரயில்நிலைய வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளால் சுகாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, நாய்கள் மற்றும் பன்றிகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT