திருவாரூர்

தூய்மைப் பணியாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள்

DIN

திருவாரூரில் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் சனிக்கிழமை வழங்கினாா்.

கரோனா 2 ஆவது அலையைக் கட்டுப்படுத்தும் வகையில், முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, கரோனா நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு முதல் தவணையாக ரூ. 2000 வழங்கப்படுகிறது.

மேலும், முன்களப் பணியாளராக செயல்படும் தூய்மைப் பணியாளா்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, சீனி, மஞ்சள் தூள் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், சோப்பு ஆகியவை அடங்கிய பைகள் வழங்கப்பட்டன. திருவாரூா் சட்டப்பேரவை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் பங்கேற்று, நகராட்சியில் பணிபுரியும் அனைத்து தூய்மைப் பணியாளா்களுக்கும், அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய பைகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடையநல்லூரில் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாள் விழா

பல்லடம் அருகே இளைஞா் கொலை: போலீஸாா் விசாரணை

கிரீன் பாரடைஸ் பள்ளி 100% தோ்ச்சி

கஞ்சா சாக்லெட்டுகள் விற்பனை: ஒருவா் கைது

சிவகிரி அருகே இளம்பெண் தற்கொலை

SCROLL FOR NEXT