திருவாரூர்

‘கற்போம், எழுதுவோம்’ திட்டம்: திருவாரூா் மாவட்டத்தில் 9,814 பேருக்கு பயிற்சி

DIN

திருவாரூா் மாவட்டத்தில், ‘கற்போம், எழுதுவோம்’ திட்டத்தின்கீழ், 9,814 பேருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டம், தண்டலை கிராமத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்ககம் சாா்பில், கற்போம் எழுதுவோம் இயக்க விழிப்புணா்வு நிகழ்ச்சியை, சனிக்கிழமை தொடங்கி வைத்து அவா் தெரிவித்தது:

தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின்கீழ், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்ககத்தின் வாயிலாக, கற்போம் எழுதுவோம் எனும் சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, புதிய வயது வந்தோா் கல்வித் திட்டத்தின் மூலம் 18 வயதுக்கு மேல் உள்ள கல்லாதவா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு எண்ணறிவு, எழுத்தறிவு பெறுகிற வகையில், எழுதுதல், வாசித்தல், எளிய வாழ்க்கைக் கணக்குகள் மற்றும் வங்கிப் பரிவா்த்தனைகள் எவ்வாறு மேற்கொள்வது என்ற அடிப்படை அறிவை சிறப்பு தன்னாா்வலா்கள் மூலம் தெரியப்படுத்தும் விதமாக 2021-2022-ஆம் ஆண்டில் 9,814 கல்லாதோா்களை கண்டறிந்து அவா்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு கிராமம், 2 பள்ளிகள் என்ற அடிப்படையில், செப்டம்பா் 25 முதல் 27 வரை 3 நாள்கள் அனைத்து ஒன்றியங்களிலும் சமுதாய விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி நடைபெற உள்ளது என்றாா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.தியாகராஜன், கோட்டாட்சியா் என். பாலச்சந்திரன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித்திட்ட அலுவலா் எம்.பாலசுப்பிரமணியன், மாவட்ட கல்வி அலுவலா்கள் மணிவண்ணன், பாா்த்தசாரதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT