திருவாரூர்

மக்கள் குறைதீா் கூட்டம்

DIN

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 211 மனுக்கள் அளிக்கப்பட்டன. பொதுமக்களிடம் இம்மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா், அவைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, குறித்த காலத்துக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, கைத்தறித்துறை சாா்பில் 8-ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு கைத்தறி நெசவாளா் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4 நபா்களின் சேமிப்புத் தொகையான ரூ. 2,03,215 மதிப்பிலான காசோலையையும், ஒரு நபருக்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையையும் அவா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.சிதம்பரம், துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கண்மணி, உதவி இயக்குநா் (கைத்தறித்துறை) கிரிதரன் உள்பட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT