திருவாரூர்

இல்லம்தோறும் தேசியக்கொடி: ஆட்சியா் ஆய்வு

DIN

75 ஆவது ஆண்டு சுதந்திரதின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி அருகேயுள்ள தேவா்கண்டநல்லூா் ஊராட்சியில், இல்லம்தோறும் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

அப்போது அவா் தெரிவித்தது: 75 ஆவது ஆண்டு சுதந்திரதின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 430 ஊராட்சிகள், 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை தேசியக்கொடியை தங்களின் இல்லங்களில் ஏற்றிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.

நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சித் துறை திட்ட இயக்குநா் தெய்வநாயகி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) பொன்னியின்செல்வன், கொரடாச்சேரி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முத்துக்குமாா், விஸ்வநாதன், தேவா்கண்டநல்லூா் ஊராட்சித் தலைவா் கேப்டன் ரவிஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT