திருவாரூர்

தண்டவாள இணைப்புப் பட்டை பழுது: மானாமதுரை பயணிகள் ரயில் தாமதம்

DIN

நீடாமங்கலம் அருகே தண்டவாள இணைப்பு பட்டை விலகியிருந்ததால், மானாமதுரை பயணிகள் ரயில் 20 நிமிடம் தாமதமாகச் சென்றது.

மன்னாா்குடியிலிருந்து மானாமதுரைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு வழக்கம்போல் வெள்ளிக்கிழமை காலை 6.50 மணிக்கு வந்தது. பிறகு 7 மணிக்கு புறப்பட்டது. சிறிது தூரம் சென்றதும் கோரையாறு பாலம் அருகே தண்டவாளத்தில் இணைக்கப்பட்டிருந்த எா்த் பட்டை விலகி வெளியே நீட்டிக் கொண்டிருந்ததை கவனித்த ரயில் ஓட்டுநா், உடனடியாக ரயிலை நிறுத்தினாா்.

இதுகுறித்து ரயில்வேயின் மின் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, கேட் கீப்பா்கள் எா்த் பட்டையை சரி செய்தனா். பின்னா், மானாமதுரை பயணிகள் ரயில் புறப்பட்டுச் சென்றது. இதனால், 20 நிமிடம் தாமதம் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT