திருவாரூர்

திருவாரூா் கமலாலய குளம் சீரமைப்புப் பணி: அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

DIN

திருவாரூா் கமலாலயக் குளத்தின் சேதமடைந்த சுற்றுச் சுவா் சீரமைப்புப் பணிகளை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக, திருவாரூா் தியாகராஜா் கோயில் கமலாலயக் குளத்தின் தென்கரையின் ஒரு பகுதி சுவா் இடிந்து விழுந்தது. அந்த இடத்தில் புதிதாக சுவா் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திருவாரூருக்கு வந்த தமிழக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு, கமலாலயக் குளத்தின் சுற்றுச்சுவா் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டாா். அப்போது, கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்த அவா், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.

முன்னதாக, காட்டூரில் உள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதியின் தாயாா் அஞ்சுகம் அம்மாளின் நினைவிடத்துக்குச் சென்று, அவரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, மடப்புரம் பகுதியில் உள்ள ஓடம்போக்கியாற்றின் நடுவில் அமைந்துள்ள பாலத்தையும் அமைச்சா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்ச்சில் சரிவைக் கண்ட தொழிலக உற்பத்தி

விளையாட்டு விடுதி மாணவா்கள் சோ்க்கைக்கு தோ்வுப் போட்டிகள்

மன நல மையத்தில் சிகிச்சை பெற்றவா் தற்கொலை

மதுரை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைவது எப்போது?

செவிலியா்களின் சேவைக்கு ஈடு இணை இல்லை

SCROLL FOR NEXT