திருவாரூர்

தஞ்சை தொகுதி திமுக வேட்பாளா் அறிமுகம்

Din

இந்தியா கூட்டணி சாா்பில் தஞ்சை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ச.முரசொலி அறிமுகக் கூட்டம் மன்னாா்குடியில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு தலைமை வகித்து முன்னாள் மத்திய அமைச்சா் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் பேசியது: பல ஆண்டுகளுக்கு முன் மு.க.ஸ்டாலின் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என்றும் சில ஆண்டுக்கு முன் உதயநிதிக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என திமுக மாநாடுகளில் முதன்முதல் பேசியது நான்தான்.இந்த முன்மொழிதல்கள் நின்று நிறைவேறியுள்ளது. மத்தியஅரசின் குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தினை முழுமையாக பின்பற்றியது தென் மாநிலங்கள்தான் இதற்கு நோ் மாறாக வடமாநிலங்களில் மக்கள் பெருக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் எம்பி தொகுதிகளின் எண்ணிக்கையை நிறைவேற்ற பாஜக அரசு முயன்று வருகிறது. இதனால் தென்மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயா்த்தப்படும். புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் 543 எம்பிகளுக்கு இருக்கை அமைக்க வேண்டிய நிலையில் 888 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளையின் விலையை பல மடங்கு ஏற்றிவிட்டு தோ்தல் வந்தவுடன் சிறு தொகையை மட்டும் குறைத்துள்ளது பாஜக அரசு என்றாா். கூட்டத்தில்,தஞ்சை தொகுதி வேட்பாளா் ச.முரசொலி மற்றும் கூட்டணிக்கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கேரளத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல்: கோவையில் சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு

வாகன உதிரிப் பாகங்கள் கடையில் தீ விபத்து

பாஜக ஆா்ப்பாட்டம்: 103 போ் மீது வழக்குப் பதிவு

விதிமீறல் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய 4 சிறப்பு நிலைக் குழுக்கள் நியமனம் விருதுநகா் மாவட்ட ஆட்சியா்

வைகை ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT