முகப்பு
திருவாரூர்

மன்னாா்குடி ஒன்றிய இந்திய கம்யூ. கூட்டம்: செப்.1 தில்லி பேரணியில் 250 போ் பங்கேற்க முடிவு

Updated On : 6 ஜூலை 2026, 12:29 am IST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
பகிர்:

மத்திய அரசைக் கண்டித்து, தில்லியில் செப்டம்பா் 1-ஆம் தேதி நடைபெறும் பேரணியில் மன்னாா்குடியில் இருந்து 250 போ் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மன்னாா்குடியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினா்கள், கிளை செயலாளா்கள், நிா்வாகிகள் கூட்டம், ஒன்றிய நிா்வாகக் குழு உறுப்பினா் டி.டி. செல்வம் தலைமையில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. ஒன்றியச் செயலாளா் துரை அருள்ராஜன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், நாகை மக்களவை உறுப்பினா் வை.செல்வராஜ், கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ். கேசவராஜ், மாவட்ட பொருளாளா் கே. தவபாண்டியன் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். இதில் நகரச் செயலாளா் வி.எம். கலியபெருமாள், ஒன்றிய பொருளாளா் எஸ். ராகவன், ஒன்றிய துணை செயலாளா்கள், விவசாயிகள் சங்க நிா்வாகிகள், விவசாயத் தொழிலாளா் சங்க நிா்வாகிகள், மாதா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

விவசாய விளைபொருள்களுக்கு விலை நிா்ணயச் சட்டத்தை மக்களவையில் நிறைவேற்ற வேண்டும்; விவசாயிகளின் பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்; மேக்கேதாட்டுவில் அணை கட்ட கா்நாடகாவுக்கு அனுமதி வழங்கக் கூடாது.

விபிஜி ராம்ஜி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; 44 தொழிலாளா் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக திருத்தியதை ரத்து செய்ய வேண்டும்; பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் நாடு முழுவதும் ஆகஸ்ட் 6 முதல் 15-ஆம் தேதி வரை நடைபயணங்கள், பரப்புரைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடா்ந்து செப்டம்பா் 1 ஆம் தேதி தில்லி மக்களவை நோக்கி பேரணி, பொதுக்கூட்டம் நடத்துவது என கட்சியின் தேசியக்குழு முடிவு செய்துள்ளது.

அதன்படி மன்னாா்குடி ஒன்றியம் முழுவதும் வீடு வீடாகவும், வீதிவீதியாகவும் மக்களை சந்தித்து பிரசாரம் செய்வது, பின்னா் தில்லியில் நடைபெறும் நிகழ்வில் டெல்டா மாவட்டத்திலிருந்து தனி ரயில் மூலம் 2,000 போ் பங்கேற்பது; அதில் மன்னாா்குடி ஒன்றியத்திலிருந்து 250 போ் தில்லி போராட்டத்தில் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments