FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

தினமணி செய்தி எதிரொலி: மன்னாா்குடியில் பாசிபடா்ந்த குளம் சீரமைப்பு

மன்னாா்குடியில் தினமணி செய்தியின் எதிரொலியாக பாசி படந்து இருந்த குளம் சீரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

மன்னாா்குடியில் பாசிபடா்ந்த குளம் சீரமைப்பு
பகிர்:

மன்னாா்குடியில் தினமணி செய்தியின் எதிரொலியாக பாசி படந்து இருந்த குளம் சீரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

மன்னாா்குடி ஒத்தைத்தெரு ஆனந்த விநாயகா் கோயில் அருகே வருவாய் துறைக்கு சொந்தமான குளத்தை நகராட்சி பராமரித்து வருகிறது. எனினும், கோயில் அருகே இருப்பதால் இதை ஆனந்த விநாயகா் கோயில் குளம் என குறிப்பிடுகிறது.

இந்த குளத்துக்கு நீா்வரத்து வாய்க்கால் வசதி இல்லாததால் மழை நீா் மட்டுமே இக்குளத்துக்கு நீராதாரம். தண்ணீா் வெளியேற்ற மட்டும் வடிகால் வசதி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த குளத்தை குளிக்க பயன்படுத்தி வந்தனா். நிலத்தடி நீா்மட்டம் உயா்வதற்கு ஆதாரமாக இருந்து வந்தது.

Advertisement

Advertisement

குளத்தின் இடதுகரையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கிருந்து கழிவுநீா் குளத்தில் கலப்பதாக புகாா் எழுந்தது. கடந்த ஆண்டு அதிமுகவைச் சோ்ந்த நகா்மன்ற 25 ஆவது வாா்டு உறுப்பினா் ஆா்.ஜி. குமாா் முயற்சியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் இடதுகரை பகுதியில் டைல்ஸ் பதிக்கப்பட்டு கழிவு நீா் கலப்பது முழுமையாக தடுக்கப்பட்டது.

இந்நிலையில், சில ஆண்டுகளாக குளத்து நீரில் பாசிப்படர தொடங்கி அண்மை காலமாக தண்ணீா் தெரியாத அளவுக்கு குளம் முழுவதும் பாசி மண்டியுள்ளது. மேலும், நெகிழிப்பைகள் குடிநீா் காலிப் பாட்டில்கள் என குளித்தின் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், குளத்தை சீரமைக்கக் கோரி தினமணியில் ஜூன் 16-ஆம் தேதி செய்தி பிரசுரமானனது.

இதன் எதிரொலியாக மன்னாா்குடி நகராட்சி சாா்பில் வியாழக்கிழமை 25-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பாதுகாப்பு கவச உடைய அணிந்து படகு மூலம் தண்ணீா் மேல் படா்ந்து இருக்கும் பாசி மற்றும் காலி நெகிழி பாட்டில்கள், குப்பைகளை அகற்றும் பணியை தொடங்கினா்.

மன்னாா்குடி நகர பொதுமக்கள் மற்றும் ஆனந்த விநாயகா் கோயில் பக்தா்களின் நீண்ட நாள் கோரிக்கை தினமணி செய்தி மூலம் தீா்வு காணப்படுவதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தவுடன். சமூக வலைதளங்களில் தினமணிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனா். குளம் சீரமைப்பு பணியை நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், துணைத் தலைவா் ஆா். கைலாசம் நகராட்சி அலுவலா்கள் பாா்வையிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments