முகப்பு
புதுதில்லி

துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட சிறுவன் சாவு

தனது நண்பரின் தந்தையின் துப்பாக்கியை எடுத்து விளையாடியபோது தவறுதலாக குண்டு பாய்ந்து 12 வயது சிறுவன் இகான்ஸ் உயிரிழந்தான்.  இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது:

Updated On : 19 ஏப்ரல் 2018, 12:51 am IST
பகிர்:

தனது நண்பரின் தந்தையின் துப்பாக்கியை எடுத்து விளையாடியபோது தவறுதலாக குண்டு பாய்ந்து 12 வயது சிறுவன் இகான்ஸ் உயிரிழந்தான்.  இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது:
தென்மேற்கு தில்லி, கன்டோன்மன்ட் பகுதியில் வசித்து வரும் இகான்ஸ் என்ற சிறுவன் தனது நண்பரின் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது வீட்டில் இருந்து துப்பாக்கியை இகான்ஸ் எடுத்துள்ளான். வீட்டில் இருந்த தனது சகோதரிக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வர அவரது நண்பர் சென்றபோது, இகான்ஸ் இருந்த அறையில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. 
சிறுவர்கள் அக்கம்பக்கத்து வீட்டில் இருந்தவர்களிடம் கூறியதையடுத்து, இகான்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். சனிக்கிழமை காலை இகான்ஸ் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இகான்ஸின் நண்பரின் தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. இந்தச் சம்பவத்தில் சதி ஏதும் இல்லை என்று இகான்ஸின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்' என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.