புதுதில்லி

தில்லியில் குளிர் காற்று; வெப்பநிலையில் மாற்றம்

DIN


தலைநகர் தில்லியில் சனிக்கிழமை குளிர் காற்று வீசியது. இதைத் தொடர்ந்து, குறைந்தபட்ச வெப்பநிலை  வெள்ளிக்கிழமையைவிட 5 டிகிரி குறைந்து 10.5 டிகிரியாக பதிவாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை  பருவ சராசரியைவிட 1 டிகிரி குறைந்து 10.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி குறைந்து 22.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
காலை 8.30 மணியளவில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 77 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 51 சதவீதமாகவும் பதிவாகியது.
இதேபோல் பாலம், ஆயா நகர் ஆகிய இடங்களில் முறையே குறைந்தபட்ச வெப்பநிலை 9.4 டிகிரி, 10.5 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி, 22.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. 
காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் பாலத்தில்  90 சதவீதம், மாலை 5.30 மணியளவில் 55 சதவீதம், ஆயா நகரில் 83 சதவீதம், 49 சதவீதம் என பதிவாகியிருந்தது. மேலும், பிற்பகலில் வெயிலின் தாக்கம் காணப்பட்டது.
முன்னறிவிப்பு: ஞாயிற்றுக்கிழமை பனிமூட்டம் காணப்படும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாக பதிவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், இந்த வாரத்தில் மற்ற நாள்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 10-14 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 19 - 24  டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் முடிவுகள்: நேரலை!

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

இன்று யோகம் யாருக்கு?

திருப்பம் தரும் தினப்பலன்!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

SCROLL FOR NEXT