புதுதில்லி

தேர்தல் நாளில் மெட்ரோ ரயில் சேவை முன்கூட்டியே தொடக்கம்: டிஎம்ஆர்சி

DIN

தில்லியில் தேர்தல் நாளான ஞாயிற்றுக்கிழமை (மே 12) மெட்ரோ ரயில்கள் வழக்கமான நேரத்தைவிட முன்கூட்டியே இயக்கப்படும் என தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) தெரிவித்துள்ளது. 
இது தொடர்பாக டிஎம்ஆர்சி அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்ததாவது: 
தில்லியில் தேர்தல் நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லி மெட்ரோ ரயில் ஒருங்கிணைப்பின் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவைகள் காலை 4 மணிக்குத் தொடங்கும். 
அப்போதுதான், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் இந்த வசதியைப் பெற முடியும். அனைத்து வழித்தடங்களிலும் காலை 6 மணி வரை 30 நிமிடங்கள் இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். 
காலை 6 மணிக்குப் பிறகு மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை காலஅட்டவணைப்படி நாள் முழுவதும் ஓடும். துவாரகா செக்டார் 21-இல் இருந்து வைஷாலி நோக்கிச் செல்லும் ரயில்கள் காலை 4.30 மணிக்கு சேவையைத் தொடங்கும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT