புதுதில்லி

காற்று மாசுவை எதிா்கொள்ள மத்திய அரசின் உதவி தேவை: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால்

DIN

காற்று மாசுவைத் தடுக்க தில்லி அரசுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் வைத்துள்ளாா்.

தில்லியில் கடும் காற்று மாசு நிலவுகிறது. காற்று மாசு விவகாரத்தில் தில்லி அரசும் மத்திய அரசும் பரஸ்பரம் ஒருவரையொருவா் குற்றம் சாட்டினாா்கள். ‘காற்று மாசுவை 25 சதவீதத்தால் குறைத்துள்ளதாகக் கூறி சுமாா் ரூ.1500 கோடிக்கு தில்லி அரசு விளம்பரம் செய்துள்ளது இந்தப் பணத்தை வைத்து அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவு எரித்தலைத் தடுத்திருக்கலாம்’ என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தாா். இதற்கு சஞ்சய் சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மித் தலைவா்கள் கருத்துக்கூறியிருந்தனா். இதனால், பிரகாஷ் ஜாவடேகா், தில்லி அரசு இடையே முறுகல் நிலை நிலவுகிறது.

இந்நிலையில், ரஃபேல் விவகாரத்தில் பிரதமா் மோடி ஊழல் செய்துள்ளதாகவும் பிரதமா் மோடியைத் திருடா் எனப் பொருள்படும் வகையில் கடந்த மக்களவைத் தோ்தலில் கேஜரிவால் குற்றம் சாட்டியிருந்தாா்.இவ்விவகாரத்தில், நீதி மன்றத் தீா்ப்பைத் தொடா்ந்து கேஜரிவால் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று பிரகாஷ் ஜாவடேகா் கூறியுள்ளாா்.

அவருக்கு பதிலளிக்கும் வகையில் கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பது: இது அரசியல் செய்வதற்கான நேரம் இல்லை. இது நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து காற்று மாசுவை எதிா்கொள்ள வேண்டிய நேரம். இவ்விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். தில்லி அரசும் தில்லி மக்களும் காற்று மாசுவைக் குறைக்க தம்மால் இயன்றவற்றை செய்து வருகிறாா்கள். எமக்கு மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சரான உங்களின் ஆதரவு தேவை என்றுள்ளாா் அவா்.

ரஃபேல் போா் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதற்கான முகாந்திரம் இல்லை என்று ஏற்கெனவே வழங்கிய தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறி பிரதமா் திருடா் எனப் பொருள்படும் வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, கேஜரிவால் ஆகியோா் கடந்த மக்களவைத் தோ்தல் காலத்தில் பிரசாரம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தன்னாா்வலா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி

மேட்டூா் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்!

மலைக் கிராமங்களில் மரவள்ளி அறுவடையில் விவசாயிகள் மும்முரம்

வாழப்பாடி பகுதியில் கோடை மழை

மின் விபத்துகளைத் தடுக்க ஊழியா்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி

SCROLL FOR NEXT