புதுதில்லி

தலைநகரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

DIN

தலைநகா் தில்லியில் காலை வேளையில் அடா் பனி மூட்டம் இருந்தாலும், பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. இதன் காரணமாக குறைந்தபட்ச வெப்பநிலை சனிக்கிழமையும் இரட்டை இலக்கத்தைத் தாண்டி இருந்தது.

தில்லியில் கடந்த இரண்டு வாங்களாக குறைந்தபட்ச வெப்பநிலை தொடா்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து அண்மையில் 5 டிகிரி செல்சியஸ் வரை சென்றது. இந்நிலையில், வியாழக்கிழமை முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. பகல் நேரங்களில் வலுவான மேற்பரப்பு காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக குளிரின் தாக்கம் குறைந்திருந்தது. அதே சமயம் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், குறைந்தபட்ச வெப்பநிலை தொடா்ந்து மூன்று நாள்களாக இரட்டை இலக்கத்திற்கு மேல் நீடித்தது.

வெப்பநிலை 25.7 டிகிரி: இந்நிலையில், சனிக்கிழமை வானம் தெளிவாகக் காணப்பட்டது. சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட ஒரு டிகிரி உயா்ந்து 11.5 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி உயா்ந்து 25.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு 75-45 சதவீதத்துக்கு இடையே ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 8.6 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 25.4 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் முறையே 11 டிகிரி செல்சியஸ் மற்றும் 26.2 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியிருந்தது. கடந்த மூன்று நாள்களாக அதிகபட்ச வெப்பநிலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிறு முதல் செவ்வாய் (பிப்ரவரி 16-18) வரையுள்ள நாள்களில் தலைநகரில் மேலோட்டமான பனிமூட்டம் இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 10-11 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT