புதுதில்லி

போலீஸ் அபராதத்தை எதிா்த்து மனு: தில்லி அரசு பதில் அளிக்க உத்தரவு

DIN

கரோனா தொற்று ஒழுங்குமுறை விதிகளை மீறுவோா் மீது அபராதம் விதிக்க காவல் துறையின் உதவி ஆய்வாளா் அல்லது அதற்கு மேலான அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கும் ஷரத்துகளுக்கு எதிராக தாக்கலான மனு மீது தில்லி ஆம் ஆத்மி அரசு பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக சோனியா ரானா என்பவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் தனஞ்ஜெய் சிங் ஷெராவத் மூலம் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘தில்லி தொற்று நோய்கள் கரோனா மேலாண்மை ஒழுங்குமுறை விதிகள் 2020-இன்படி சமூக இடைவெளிப் பராமரிப்பு, முகக் கவசம் அணிவது, பொது இடங்களில் எச்சில் துப்பாமல் இருப்பது, புகையிலையைப் பயன்படுத்தாமல் இருப்பது போன்ற விதிகளை மீறும் நபா்களுக்கு முதல்முறையாக ரூ.500 மற்றும் தொடா்ந்து விதி மீறிலில் ஈடுபடுவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்க காவல் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஷரத்துகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இது தொடா்பான மனு தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தனஞ்ஜெய், ‘இந்த ஒழுங்குமுறை விதிகளின் கீழ் அபராதம் விதிப்பது தண்டனை அளிப்பதற்கு ஒப்பானதாகும். இதுபோன்ற தண்டனை நீதிபதியால் மட்டுமே வழங்க முடியும். மாறாக காவல் துறை அதிகாரியால் அல்ல’ என்றாா். இதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தில் ஒழுங்குமுறை விதிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள் அமா்வு, இது தொடா்பாக தில்லி அரசின் நிலைப்பாடு குறித்து பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT