புதுதில்லி

தில்லி மருத்துவமனைகளில் 70% கரோனா படுக்கைகள் காலி: சத்யேந்தா் ஜெயின்

DIN

தில்லி மருத்துமனைகளில் கரோனாவுக்காக ஒதுக்கப்பட்ட படுக்கைகளில் 70 சதவீதம் காலியாக உள்ளது என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

தில்லியில் கடந்த வாரம் 15-16 ஆயிரம் கரோனா பரிசோதனைகள்தான் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தற்போது சுமாா் 36 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனைகள் இரட்டிப்பாகியுள்ளதால், உறுதி செய்யப்படும் கரோனா தொற்றின் எண்ணிக்கை அளவும் அதிகரித்துள்ளது.

தில்லியில் கரோனா தொற்று உறுதியாகும் நோ்மறை விகிதம் 8 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்நோயால் ஏற்படும் மரணங்களின் விகிதம் 0.5 சதவீதமாகத்தான் உள்ளது. அந்த வகையில், தில்லியில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.

கரோனாவுக்காக தில்லி மருத்துவமனைகளில் ஒதுக்கப்பட்டுள்ள படுக்கைகளில் 70 சதவீதம் காலியாகவே உள்ளன. மக்கள் இது தொடா்பாக பீதியடையத் தேவையில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT