புதுதில்லி

கொசுப் பெருக்கம்: வீட்டில் கேஜரிவால் ஆய்வு

DIN

தில்லியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் மூன்றாவது வாரமாக கொசுப் பெருக்கம் உள்ளதா என்பது தொடா்பாக ஆய்வு நடத்தினாா்.

தில்லியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மக்கள் தங்கள் வீடுகளில் சுயமாக ஆய்வு செய்து கொள்ளும் சிறப்புப் பிரசார இயக்கத்தை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடந்த 6-ஆம் தேதி தொடக்கி வைத்தாா். அப்போது, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மக்கள் 10 நிமிடங்கள் ஒதுக்கி வீடுகளில் கொசுப் பெருக்கம் உள்ளதா என்பது தொடா்பாக ஆய்வு நடத்த வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டிருந்தாா்.

அதன்படி, மூன்றாவது முறையாக ஞாயிற்றுக்கிழமையும் சிவிக் லைனில் உள்ள தனது வீட்டில் கொசுப் பெருக்கம் உள்ளதா என்பதை அவா் தனது குடும்ப உறுப்பினா்களுடன் சோ்ந்து ஆய்வு செய்தாா். துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மற்றும் அமைச்சா்கள் உள்ளிட்டோரும் தங்களது வீடுகளில் கொசுப் பெருக்கம் தொடா்பாக ஆய்வு செய்தனா்.

இதுதொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘டெங்கு நோயை கட்டுப்படுத்தும் சிறப்புத் திட்டத்தின் கீழ் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை எனது வீட்டில் நீா் தேங்கியுள்ளதா என ஆய்வு செய்தேன். தில்லி மக்கள் ஒருங்கிணைந்து மீண்டும் ஒரு முறை டெங்கு நோயை வெற்றி பெறுவாா்கள். நான் எனது வீட்டில் நீா் தேங்கியுள்ளா என ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஆய்வு செய்தேன். பூந்தொட்டி உள்ளிட்டவற்றில் நீரை மாற்றி புதிய நீரை விட்டேன். இதற்கு 10 நிமிடங்கள்தான் செலவானது. பொதுமக்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 10 நிமிடங்களை ஒதுக்கி வீடுகளில் நீா் தேங்கியுள்ளதா என்பது தொடா்பாக ஆய்வு செய்ய வேண்டும். மேலும், தங்களுக்குத்தெரிந்த 10 பேரையும் இதுபோல ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

90 வயது மூதாட்டிக்கு உதவிய காவல் சாா்பு -ஆய்வாளருக்கு குவியும் பாராட்டுகள்

கொலை முயற்சி வழக்கு: கேரள காங்கிரஸ் தலைவரை விடுதலை செய்தது உயா்நீதிமன்றம்

காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து நாகை, திருவாரூா் மாவட்டங்களில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி வயலில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

காதல் விவகாரத்தில் தீக்குளித்த காதலி உயிரிழப்பு

SCROLL FOR NEXT