புதுதில்லி

தில்லியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

DIN


புது தில்லி: தில்லியில் வெயிலின் தாக்கம் தொடா்ந்துஅதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 35.2 டிகிரி செல்சியஸாக பதிவானது.

தில்லி மற்றும் தேசியத் தலைநா் வலயப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தில்லி நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 19.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி உயா்ந்து 35.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 47 சதவீதமாகவும், மாலையில் 17 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோன்று அதிகபட்ச வெப்பநிலை ஆயாநகரில் 35.8 டிகிரி, தில்லி பல்கலை. பகுதியில் 35.7 டிகிரி, லோதி ரோடு பகுதியில் 35.0 டிகிரி, நரேலாவில் 36.7 டிகிரி, பாலத்தில் 35.8 டிகிரி, ரிட்ஜில் 36.3 டிகிரி செல்சியஸாகபதிவாகியது.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு மாலை 8 மணியளவில் 142 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் நீடித்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) தெரிவித்துள்ளது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 9) வானம் தெளிவாக காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT