புதுதில்லி

தில்லியில் மிதமான பனி மூட்டத்தால் இதமான வானிலை!

 நமது நிருபர்

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை இதமான வானிலை நிலவியது. அதிகபட்ச வெப்பநிலை 2 புள்ளிகள் அதிகரித்து 26.8 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. காலையில் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மூடுபனி காணப்பட்டது. பகலில் இதமான வெயில் நிலவியது.

நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியை விட 1 டிகிரி குறைந்து 9.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 2 புள்ளிகள் அதிகரித்து 26.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 100 சதவீதமாகவும், மாலையில் 61சதவீதமாகவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மாலையில் 325 புள்ளிகளாகப் பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் நீடித்தது. தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள காஜியாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா, குருகிராம் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ஐந்தாவது நாளாக வெள்ளிக்கிழமை மிகவும் மோசம் பிரிவில் நீடித்தது. ஃபரீதாபாத் பகுதியில் மோசம் பிரிவில் காணப்பட்டது. காற்றின் ஒட்டுமொத்த தரக்குறியீடு நொய்டாவில் 324, காஜியாபாதில் 352, கிரேட்டா் நொய்டாவில் 304, பரீதாபாதில் 288, குருகிராமில் 338 என்ற அளவில் பதிவாகி இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, சனிக்கிழமை (பிப்ரவரி 20) மிதமான பனி மூட்டம் நிலவும் எனவும் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் எனவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT