புதுதில்லி

பிரபல கிரிமினல் அஜித் சிங் கொலையில் முக்கிய எதிரி கைது

DIN

புது தில்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த பிரபல கிரிமினல் அஜித் சிங்கின் கொலையுடன் தொடா்புடைய முக்கிய எதிரியான ராஜேஷ் குமாரை, வடகிழக்கு தில்லியில் உள்ள ஸ்வரூப் நகரில் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

இது தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி கூறியது: உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரைச் சோ்ந்தவா் அஜித் சிங். அவா் மீது நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமாா் 17 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஜனவரி மாதம் லக்ளென நகரில் உள்ள கோமதி நகரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவா் கொல்லப்பட்டாா். இந்தக் கொலைக்கு காரணமான ஜெய் (எ) ராஜேஷ் குமாா் மீது வழக்குப் பதிவு செய்து உத்தரப் பிரதேச போலீஸாா் தேடி வந்தனா்.

மேலும், தலைமறைவாக இருந்த ராஜேஷை கண்டுபிடிக்க தகவல் தந்து உதவுவோருக்கு ரூ.50 ஆயிரம் வெகுமதி அளிக்கப்படும் என காவல் துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில், வடகிழக்கு தில்லி ஸ்வரூப் நகரில் அபா் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் போலீஸாா் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டிருந்தனா். அப்போது, நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் அவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து, வெளிநாட்டு துப்பாக்கி, 5 துப்பாக்கிக் குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன என்று அந்த மூத்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டின் மீது மண்ணெண்ணை பாட்டில் வீசிய வழக்கில் 7 போ் கைது

இளைஞரை மிரட்டி வழிப்பறி: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

திருப்பத்தூரில் 768 போ் நீட் தோ்வு எழுதுகின்றனா் : சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு

கட்டடம் இடித்து தரைமட்டம்: 17 போ் மீது வழக்குப் பதிவு

முதியவரை துப்பாக்கியால் சுட்ட இளைஞா் கைது

SCROLL FOR NEXT