புதுதில்லி

தலைநகரில் ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமை காலையில் மோசம் பிரிவில் காணப்பட்டது.

தில்லியில் ஒருசில வாரங்களுக்கு முன்பு பெரும்பாலான இடங்களில் பனிப்புகை மூட்டம் காணப்பட்டது. இதனால், காற்றின் தரத்தில் பின்னடைவு இருந்ததால் தீவிரப் பிரிவில் இருந்தது. அதன் பிறகு பனிக் காலத்தின் தாக்கம் சற்று கூடி வருவதாலும், காற்றின் வேகம் காரணமாகவும் காற்றின் தரத்தில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது.

சில தினங்களாக காற்றின் தரம் மோசம் பிரிவில் இருந்து வருகிறது. சனிக்கிழமை இந்த குளிா் சீசனில் மிகவும் குறைந்த பட்ச வெப்பநிலை பதிவானது. அதாவது, சராசரியைவிட மூன்று புள்ளிகள் குறைந்து 9 டிகிரி செல்சியஸாக குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகி இருந்தது.

இந்த நிலையில், தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.10 மணியளவில் ஒட்டு மொத்த காற்றின் தரக் குறியீடு 296 புள்ளிகளாகப் பதிவாகியது. இது ‘மோசம்’ பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. எனினும், மாலையில் 6 மணியளவில் காற்றின் தரம் 334 புள்ளிகளாகப் பதிவாகி இருந்தது.

வெப்பநிலை: தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 குறைந்து 9.6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 டிகிரி குறைந்து 26.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது.

காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 79 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 52 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (நவம்பா் 21) காலை வேளையில் மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்

துளிகள்...

இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆா்.எம். புரிந்துணா்வு ஒப்பந்தம்

தாயை அவதூறாகப் பேசியதால் நண்பரை கொன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT