முகப்பு
புதுதில்லி

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத் திருத்தம் தென் மாநிலங்களைப் பாதிக்கும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் கொண்டு வரப்படும் திருத்தம் தென் மாநிலங்களைப் பாதிக்கும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

Updated On : 8 ஜூலை 2026, 3:32 am IST
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - கோப்புப் படம்
பகிர்:

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் கொண்டு வரப்படும் திருத்தம் தென் மாநிலங்களைப் பாதிக்கும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தற்போது அந்தியோதய அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்துக்கு மாதந்தோறும் 35 கிலோ உணவு தானியங்கள் அளிக்கப்படுகிறது. இந்நிலையில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட உள்ள திருத்தத்தின்படி, ஒரு குடும்பத்துக்கு மாதந்தோறும் அளிக்கப்படும் 35 கிலோ உணவு தானியங்கள் என்பது ஒரு நபருக்கு மாதந்தோறும் 7 கிலோ உணவு தானியங்களாக மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த மாற்றம் அதிகம் போ் உள்ள குடும்பங்களுக்கு எந்தப் பயனையும் அளிக்காது என்பதுடன் சிறிய குடும்பங்களுக்குத் தற்போது கிடைத்து வரும் உணவுத் தானிய ஒதுக்கீட்டையும் கணிசமாகக் குறைத்துவிடும்.

Advertisement

Advertisement

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம் சமூகத்தின் மிகவும் ஏழ்மையான, அதிக கஷ்டநஷ்டங்களை சந்திக்கக் கூடிய பிரிவினரை அளவுக்கு அதிகமாக பாதிக்கும். இந்தத் திருத்தம் மாநிலங்களை, குறிப்பாக குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியதன் விளைவாக, குடும்ப உறுப்பினா்களின் சராசரி எண்ணிக்கை குறைந்துள்ள தென் மாநிலங்களைப் பாதிக்கும். மக்கள்தொகையை ஸ்திரப்படுத்துவதில் சாதனைகள் படைத்தபோதிலும், இந்த மாநிலங்களுக்கு ஒட்டுமொத்த உணவு தானியங்கள் ஒதுக்கீடு குறிப்பிடத்தக்க அளவு குறையும்.

ஏழைகளுக்கு விரோதமாக கொண்டுவரப்படும் திருத்தம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைப் பலவீனமாக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முயற்சியை அம்பலப்படுத்தியுள்ளது. இந்தத் திருத்தம் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments