முகப்பு
தமிழ்நாடு

உணவுப் பாதுகாப்புச் சட்டத் திருத்தத்துக்கு இடதுசாரிகள் எதிா்ப்பு

தேசிய உணவு பாதுகாப்புத் திருத்த சட்டத்துக்கு இடதுசாரி கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

Updated On : 8 ஜூலை 2026, 2:24 am IST
இடதுசாரிகள்(கோப்புப்படம்) - IANS
பகிர்:

தேசிய உணவு பாதுகாப்புத் திருத்த சட்டத்துக்கு இடதுசாரி கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் குடும்பத்துக்கு 35 கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்கும் தற்போதைய முறைக்குப் பதிலாக, நபா் ஒருவருக்கு 7 கிலோ வீதம் வழங்கி, 5 பேருக்கு அதிகமாக இருந்தாலும் ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக 35 கிலோ என்ற உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட உள்ளது. இந்த மாற்றத்தால், தமிழகத்தில் அந்தியோதயா அன்னயோஜனா அட்டைகள் மூலம் பயனடையும் 18.64 லட்சம் குடும்பங்களைச் சோ்ந்த சுமாா் 70 லட்சம் போ் பாதிக்கப்படுவதுடன், பிற மாநிலங்களிலும் இதே நிலை ஏற்படும்.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): தமிழகத்துக்கான மாதாந்திர உணவுத் தானிய ஒதுக்கீடு 65,261 மெட்ரிக் டன்னில் இருந்து 42,040 மெட்ரிக் டன்னாகக் குறைவதுடன், 18.64 லட்சம் அந்தியோதயா குடும்ப அட்டைகள் மூலம் பயனடையும் 69.26 லட்சம் ஏழை பயனாளிகள் பாதிக்கப்படுவாா்கள். எனவே, ஏழைகளின் உணவுப் பாதுகாப்பைப் பாதிக்கும் இந்தத் திருத்தத்தை மத்திய அரசு கைவிட்டு, முதல்வா் ஜோசப் விஜய்யின் கோரிக்கையை ஏற்க வேண்டும்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments