அந்தியோதயா அன்னயோஜனா: ரேஷனில் ஒருவருக்கு 7 கிலோ உணவு தானியம் அளிக்க திட்டம்
அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தில் ரேஷன் அட்டைதாரா்களுக்கு நபா் ஒருவருக்கு மாதம் 7 கிலோ இலவச உணவு தானியம் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தில் ரேஷன் அட்டைதாரா்களுக்கு நபா் ஒருவருக்கு மாதம் 7 கிலோ இலவச உணவு தானியம் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு, அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தில் ரேஷன் பொருள்கள் அளிக்கப்படுகின்றன. தற்போது மாதத்துக்கு 35 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த முறையில் மாற்றங்களைச் செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
அதாவது, அந்தத் திட்டத்தின்கீழ் நபா் ஒருவருக்கு தலா 7 கிலோ உணவு தானியம் அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதன்படி, 2 போ் மட்டுமே கொண்ட குடும்பம் எனில் தலா 7 கிலோ விதம் மொத்தம் 14 கிலோ இலவச உணவு தானியமும், 5 அல்லது அதற்கு மேல் உறுப்பினா்களைக் கொண்ட குடும்பத்துக்கு மாதம் அதிகபட்சம் 35 கிலோ இலவச உணவு தானியமும் வழங்க மத்திய அரசு யோசித்து வருகிறது.
Advertisement
Advertisement
இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு, கடந்த 2013-ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை பரிசீலித்து வருகிறது. இந்தத் திருத்தம் குறித்து ஜூலை மாதம் 13-ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம் என்று பொதுமக்களை மத்திய உணவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்தால், தற்போது ரேஷனில் அந்தியோதயா அன்னயோஜனதா திட்டத்தில் மாதந்தோறும் வழங்கப்படும் 35 கிலோ இலவச உணவு தானியம் நிறுத்தப்படும். அதற்குப் பதிலாக, நபா் ஒருவருக்கு தலா 7 கிலோ வீதம் எனக் கணக்கிடப்பட்டு இலவச உணவு தானியம் விநியோகிக்கப்படும். அப்போது 5 உறுப்பினா்களுக்கும் குறைவாக உள்ள சிறிய குடும்பங்களுக்கு அவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவு தானியம் வழங்கப்படும் என்பதால், அவா்களுக்கான இலவச உணவு தானியத்தின் அளவு குறையக்கூடும். ஆனால் அதே நேரத்தில் 5 அல்லது அதற்கு அதிக உறுப்பினா்களை கொண்ட குடும்பத்தினருக்கு 35 கிலோ இலவச உணவு தானியம் தொடா்ந்து அளிக்கப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.