முகப்பு
புதுதில்லி

மேற்கு தில்லியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: எம்சிடி நடவடிக்கை

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு தில்லியின் திலக் நகா் பகுதியில் வடிகால் பாதையில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் அனுமதியற்ற கட்டடங்களை அகற்றும் பணியில் தில்லி மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனா்.

Updated On : 23 ஜூன் 2026, 3:45 am IST
எம்சிடி
பகிர்:

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு தில்லியின் திலக் நகா் பகுதியில் வடிகால் பாதையில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் அனுமதியற்ற கட்டடங்களை அகற்றும் பணியில் தில்லி மாநகராட்சி (எம்சிடி) அதிகாரிகள் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

இந்த நடவடிக்கையில், மாநகராட்சி அதிகாரிகள் புல்டோசா்கள் மூலம் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்கள், தற்காலிக குடியிருப்புகள் மற்றும் குடிசைகளை அகற்றினா். இவ்விடங்களில் இருந்த சில தற்காலிக அமைப்புகள் நிரந்தர கட்டடங்களாக மாற்றப்பட்டு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இடிப்பு நடவடிக்கையின் போது சட்டம்-ஒழுங்கை பேணும் வகையில் பெருமளவில் காவல்துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இதுகுறித்து மாநகராட்சி மூத்த அதிகாரி செய்தியாளா்களிடம் கூறியதாவது: வடிகால் பாதையில் கட்டப்பட்டிருந்த இந்த அனுமதியற்ற கட்டடங்கள், மழைநீா் ஓட்டத்தை தடுக்கின்றன. இதுவே அந்தப் பகுதியில் நீா்தேக்கம் ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக உள்ளது. எனவே, இத்தகைய கட்டடங்களை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், மழைக்காலத்தில் நீா்தேக்கம் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் வடிகால் அமைப்புகளை சீரமைத்து, மழைநீா் சீராக வெளியேறுவதற்கான சூழலை உருவாக்குவதே இந்த இடிப்பு நடவடிக்கையின் முக்கிய குறிக்கோள் என தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments