சுற்றுலா பயணிகளை தேனீக்கள் கொட்டின
:மாத்தூர் தொட்டிப் பாலத்தில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை தேனீக்கள் கொட்டின. மாத்தூர் தொட்டிப் பாலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்
:மாத்தூர் தொட்டிப் பாலத்தில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை தேனீக்கள் கொட்டின.
மாத்தூர் தொட்டிப் பாலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். பாலத்தின் மையப்பகுதியின் கீழ்ப்புறத்தில் மலைத்தேனீக் கூடு இருந்தது.
தேனீக்கள் பிற்பகலில் திடீரென கலைந்தனவாம். அவை சுற்றுலாப் பயணிகளை கொட்டத் தொடங்கின. இதனால் சுற்றுலாப் பயணிகள் சிதறி ஓடினர். ஆனாலும் தேனீக்கள் அவர்களை துரத்திக் கொட்டின. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டனர். ஒரு குழந்தை கடுமையாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது..
Advertisement
Advertisement
பாதிக்கப்பட்டோர் தக்கலை, குலசேகரம், திருவட்டாறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
ன