சுற்றுலா பயணியிடம் நகைத் திருட்டு
திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணியிடமிருந்து ஞாயிற்றுக்கிழமை 33 கிராம் தங்க நகை அடங்கிய பையைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணியிடமிருந்து ஞாயிற்றுக்கிழமை 33 கிராம் தங்க நகை அடங்கிய பையைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் சற்குண வீதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் ஜோயல். இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் ஞாயிற்றுக்கிழமை திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்தார். ஜோயல், குழந்தைகள் குளித்துக் கொண்டிருந்தனர். ஜோயலின் மனைவி தங்க நகைகள், துணிகள் அடங்கிய பையுடன் ஒரு பகுதியில் அமர்ந்திருந்தாராம். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பையைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனராம். பையில், 33 கிராம் தங்க நகைகள், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை இருந்தனவாம். புகாரின் பேரில் அருமனை போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.