ஏழுதேசம் பேரூராட்சி அலுவலகத்தில் எம்.எல்.ஏ. உள்ளிருப்புப் போராட்டம்
நித்திரவிளை அருகேயுள்ள ஏலூர்- பூத்துறை சாலையைச் சீரமைக்கக் கோரி, கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், ஏழுதேசம் பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
நித்திரவிளை அருகேயுள்ள ஏலூர்- பூத்துறை சாலையைச் சீரமைக்கக் கோரி, கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், ஏழுதேசம் பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படும் ஏலூர் - பூத்துறை சாலையைச் சீரமைக்கக் கோரி, அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தின. எனினும் சாலை சீரமைக்கப்படவில்லை. இந்நிலையில், புதன்கிழமை காலையில் தனது கட்சி நிர்வாகிகளுடன் பேரூராட்சி அலுவலகம் சென்ற எம்எல்ஏ ராஜேஷ்குமார், மேற்கூறிய சாலையைச் சீரமைக்கக் கோரி பேரூராட்சி செயல்அலுவலர் ஏசுபாலனிடம் மனு அளித்தார். தொடர்ந்து, செயல்அலுவலர் அறையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அவரிடம், செயல் அலுவலர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில், 14 ஆவது நிதிக்குழு மூலம் ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாவும், 30 நாள்களுக்குள் இச் சாலை சீரமைக்கும் பணி தொடங்கும் என்றும் எம்எல்ஏவிடம் உறுதியளிக்கப்பட்டது. இதையேற்று போராட்டத்தை எம்எல்ஏ தரப்பினர் விலக்கிக்கொண்டனர் என்றார் எம்எல்ஏ.
போராட்டத்தில், ஏழுதேசம் நகர காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரகுமார், மாவட்ட மீனவரணித் தலைவர் அந்தோணிபிச்சை, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் பி. ராஜேஷ், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ஆர். டென்னிஸ், முன்சிறை வட்டாரத் தலைவர் கிறிஸ்டோபர், ஏழுதேசம் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஏ. மேரிபாய், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி. லலிதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.