முகப்பு
கன்னியாகுமரி

அனுமதியின்றி பட்டாசு விற்ற இருவர் கைது

நித்திரவிளை அருகே அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 25 டிசம்பர் 2018, 7:10 am IST
பகிர்:

நித்திரவிளை அருகே அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
பண்டிகை காலங்களில் தீயணைப்புத்துறை, காவல்துறையின் அனுமதிபெற்று பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்டறிய காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
நித்திரவிளை அருகே சின்னத்துறை மீனவக் கிராமத்தில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.  காவல் உதவிஆய்வாளர் சோபனராஜ் தலைமையில் போலீஸார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். 
உரிய அனுமதியின்றி பட்டாசு விற்பனையில் ஈடுபட்ட சிவகாசி பகுதியைச் சேர்ந்த பரமசிவன் (54), திருச்சியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (19) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். விற்பனைக்கு வைத்திருந்த பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments