முகப்பு
கன்னியாகுமரி

மதத்தின் பெயரால் நடக்கும் பிரிவினையை முறியடிக்க வேண்டும்:  டி.டி.வி. தினகரன்

மதத்தின் பெயரால் வளர்க்கப்படும் பிரிவினையை ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டும் என்றார் அம்மா மக்கள்

Updated On : 25 டிசம்பர் 2018, 9:56 am IST
பகிர்:

மதத்தின் பெயரால் வளர்க்கப்படும் பிரிவினையை ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டும் என்றார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.
குமரி மாவட்டம், அருமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அவர் பேசியதாவது:
இந்த விழா மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடப்படுவது சிறப்பாக உள்ளது.
 நாம் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உணர்வால் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள். இந்த உணர்வை எப்போதும் நாம் நெஞ்சில் ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
தற்போது மதத்தின் பெயரால் பிரிவினையை வளர்க்கும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த முயற்சியை நாம் ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டும். தமிழக மக்களை பாதிக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தற்போதைய நிலையில் தமிழகத்திற்கு ஒரு மாற்றம் தேவை.
குமரி மாவட்ட மக்கள் தேசிய கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பவர்கள். தற்போது தேசிய கட்சிகள் மாநிலங்களின் நலனில் அக்கறை இல்லாமல் செயல்படுகின்றன.
 எனவே, தமிழகத்தின் நலனில் அக்கறை கொண்ட மாநிலக் கட்சிக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், அருமனை கிறிஸ்தவ இயக்கச் செயலர் சி.ஸ்டீபன் அறிமுக உரையாற்றினார். கிறிஸ்தவ இயக்க நிர்வாகிகள் டென்னிஸ், கென்னத், சி.டி. அருள், ஜோஸ் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸீபா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் திரைப்பட தயாரிப்பாளர் கெட்டப் ராஜேந்திரன், ராபர்ட் கிறிஸ்டோபர்  மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், கிறிஸ்தவ மதபோதகர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments