கன்னியாகுமரி

ஆசிரியர்கள்  குறைகளை களைய தனியாக கூட்டு அமர்வு  நடத்த வலியுறுத்தல்

DIN

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் குறைகளை களைய ஒவ்வொரு கல்வி மாவட்டங்களிலும் தனித்தனி தேதிகளில் கூட்டு அமர்வு நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து,  தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக குமரி மாவட்டத்  தலைவர் இளங்கோ, மாவட்டச்  செயலர் வினித், பொருளாளர் ஜெயகுமார் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலரிடம் அளித்துள்ள மனுவில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் குறைகளை களைய ஒவ்வொரு கல்வி மாவட்டங்களிலும் தனித்தனி தேதிகளில் கூட்டு அமர்வு நடத்த வேண்டும். 
மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்வு எழுதும் பள்ளிகளில் செய்முறை தேர்விற்கு ஒரு பாடத்திற்கு இரண்டு ஆசிரியர்களை தேர்வர்களாக நியமிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

சிறகில்லாத தேவதை...!

SCROLL FOR NEXT