இளைஞரை கொல்ல முயற்சி: தொழிலாளி மீது வழக்கு
மண்டைக்காடு அருகே இளைஞரை தாக்கிய தொழிலாளியை போலீஸார் கைது செய்து அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மண்டைக்காடு அருகே இளைஞரை தாக்கிய தொழிலாளியை போலீஸார் கைது செய்து அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கருங்கல் பாலப்பள்ளம் புதுக்காடு வெட்டிவிளையைச் சேர்ந்த சாம்டேனியல் மகன் அஜின் சாம் (19). இவர் மணவாளக்குறிச்சி அருகேயுள்ள சேரமங்கலம் பொட்டல்விளையில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.
அப்போது இவர், அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவியை பின் தொடர்ந்து சென்று கேலி, கிண்டல் செய்தாராம். இதையடுத்து அந்த மாணவியின் தந்தை வில்சன், அஜின்சாமிடம் சனிக்கிழமை தகராறு செய்ததோடு, கட்டையால் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அவர் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில், மண்டைக்காடு போலீஸார் வில்சன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.