மார்த்தாண்டம் அருகே தொழிலாளி சடலம் மீட்பு
மார்த்தாண்டம் அருகே இறந்த தொழிலாளியின் சடலம் திங்கள்கிழமை சாலையோரம் கிடந்தது.
மார்த்தாண்டம் அருகே இறந்த தொழிலாளியின் சடலம் திங்கள்கிழமை சாலையோரம் கிடந்தது.
மார்த்தாண்டம் அருகேயுள்ள காப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (55). இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். விஜயனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம். ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற விஜயன், இரவு வீடுதிரும்பவில்லையாம். இந்த நிலையில், திங்கள்கிழமை காப்புக்காடு சந்திப்பு அருகேயுள்ள ஒரு கடையின் முன் விஜயன் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.