முகப்பு
கன்னியாகுமரி

மரியா பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

Updated On : 25 பிப்ரவரி 2019, 10:05 am IST
பகிர்:

ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கல்லூரியின் இயந்திரவியல் துறையின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற  இக்கருத்தரங்கை அருள்பணியாளர் டோமி லிபின் ராஜா ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். 
மரியா கல்விக் குழுமங்களின் தலைவர்  ஜி. ரசல் ராஜ்,  துணைத் தலைவர் பி. ஷைனி தெரசா ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். கருத்தரங்கில் கூடங்குளம் அணுமின் நிலைய தொழில்நுட்ப அலுவலர் ஏ.வி. சதீஷ்  சிறப்புரையாற்றினார்.
கல்லூரி இயக்குநர் ஹரிஹரசுப்பிரமணி,  பேராசிரியர் தேவ் ஆர். திலீபன், அலுவலக மேலாளர் டேவிட் அருள் தாஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து வந்திருந்த மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். 
இதில் சிறந்த கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் ரோபோட்டிக் கண்காட்சி நடத்தபட்டது. கருத்தரங்க ஏற்பாடுகளை இயந்திரவியல் துறைத் தலைவர் ஷிபு செந்தில் லால் தலைமையில் பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.