கன்னியாகுமரி

சேர்ந்தமரம் அருகே அனுமதியின்றி கலைநிகழ்ச்சி: 23 பேர் மீது வழக்குப் பதிவு

DIN

சேர்ந்தமரம் அருகேயுள்ள வீரசிகாமணியில் அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் கலைநிகழ்ச்சி நடத்திய பிரச்னையில் 23 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
வீரசிகாமணியில் உள்ள ஸ்ரீராஜகோபாலமன்னார் சுவாமி கோயிலில் தற்போது பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் போது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை, அந்தந்த சமுதாயத்தினர் வசிக்கும் பகுதியில் நடத்திக்கொள்ள வேண்டும் என காவல் துறையால் அறிவுறுத்தப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில், போலீஸாரிடம் தெரிவித்ததற்கு மாறாக, கோயிலில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாம். இதையடுத்து, அங்கு சென்ற காவல் நிலைய ஆய்வாளர் கோவிந்தன், உதவி ஆய்வாளர் உத்திரகுமார் ஆகியோர் காவல் துறை அனுமதி பெறாமல் கோயிலில் கலைநிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என கூறினர். எனினும் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து, கலைநிகழ்ச்சியை நடத்திய சமுதாய பிரமுகர்கள் 23 பேர் மீது சேர்ந்தமரம் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT