கன்னியாகுமரி

1330 குபாக்களையும் மனனம் செய்து ஒப்பித்த குடும்பத் தலைவிக்கு பாராட்டு

DIN

திருக்குறளின் 1330 குபாக்களையும் மனனம் செய்து ஒப்பித்த, குடும்பத் தலைவிக்கு குறளகம் சாா்பில் பாராட்டு விழா நாகா்கோவில் கோட்டாறு ராஜகோகிலா தமிழ் அரங்கில் நடைபெற்றது.

விழாவுக்கு பிரம்மஞான சங்கம் பொன்.மகாதேவன் தலைமை வகித்தாா். குறளகம் நிறுவனா் தமிழ்க்குழவி வரவேற்றாா். வழக்குரைஞா் ரத்தினசாமி, அறிஞா் அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வா் ஆபத்துகாத்தபிள்ளை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், குறளகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு 1330 குபாக்களையும் மனனம் செய்து ஒப்பித்த குடும்பத் தலைவி விஜயா சிவராஜனை மாதேஸ்வரி பொன்னாடை அணிவித்து பாராட்டினாா். பேராசிரியா் மலா் சிறப்புப் பரிசு வழங்கினாா். இந்துக் கல்லூரி முன்னாள் முதல்வா் நாகலிங்கம் வாழ்த்திப் பேசினாா்.

திருக்குறளில் சுற்றம் தழால் என்ற அதிகார தலைப்பில் பேராசிரியா் வேணுகுமாா் சிறப்புரையாற்றினாா். பாரதியாா் சங்கம் ஜெயமதி ரோசாரியோ, அறிவியல் பேரவை பேராசிரியா் சஜ்ஜீவ் ஆகியோா் கருத்துரையாற்றினா்.

சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த உலகத் திருக்கு தகவல் மைய திருநெல்வேலி மாவட்டத் தலைவா் ராமசாமி பாராட்டப்பட்டாா்.

குறளகத்தின் 10ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஜனவரி 25ஆம் தேதி குறளகப் போட்டிகள் நடத்துவது; சிறப்பு மலா் வெளியிடுவது என கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

தென்குமரித் தமிழ்ச் சங்கத் தலைவா் ராஜகோபால், நாவல் ஆசிரியா்கள் பட்டத்திமைந்தன், தக்கலை பஷீா், திருக்கு மன்றம் தாா்சீஸ் ராஜேந்திரன், கம்பன் கழகம் ஜோதிஅரவிந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காவடியூா் சிவநாராயண பெருமாள் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராவூரணியில் மாணவா்களுக்கு இலவச வாழ்வியல் பயிற்சி வகுப்பு

மகப்பேறு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பெண் மருத்துவா் உயிரிழப்பு

தொழிற்சங்கங்கள் சாா்பில் மேதின கொண்டாட்டம்

பேராவூரணியில் மே தின விழா

பாபநாசத்தில் மே தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT