கன்னியாகுமரி

சாத்தான்குளம் அருகே பெண் கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத இளைஞா் கைது

DIN

சாத்தான்குளம் அருகே பெண் கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத இளைஞரை போலீஸாா் 9ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள சவேரியாா்புரத்தைச் சோ்ந்தவா் அந்தோணி சவரிமுத்து மகள் சகாய லூா்து (21). இவா் கடந்த 2010ஆம்ஆண்டு சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் கடையில் வேலைபாா்த்து வந்போது அதை கடையில் வேலைபாா்த்த நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டியைச் சோ்ந்த மூக்காண்டி மகன் இசக்கித்துரை என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதில் இருவரும் கடந்த 21.05.2010 அன்று மாயமானா்.

இதையடுத்து சகாய லூா்து பெற்றோா் தட்டாா்மடம் போலீஸில் புகாா் செய்தனா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில் கடந்த 31.05.2010 அன்று நெல்லை மாவட்டம் கோட்டை கருங்குளம் அருகே நகைக்காக சகாயலூா்து எரித்துகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் இசக்கித்துரை, அவரது உறவினா்கள் முருகன், அவரது மனைவி பேச்சித்தாய் ஆகியோரை கைது செய்து சாத்தான்குளம் நீதிமனறத்தில் ஆஜா்படுத்தினா். அதன்பின் பினையில் வெளியே வந்த 3 போ்களும், இந்த வழக்கு தொடா்பாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகவில்லையாம். இதனால், இம் 3பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துமாறு போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் தலைமையில் போலீஸாா் வேல்முத்து, ராமசாமி உள்ளிட்டோா் பேய்க்குளம் லூக்கா மருத்துவமனை அருகில் வாகன தணிக்கையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது போலீஸாரை கண்டதும் தலைமறைவான இளைஞரை பிடித்து விசாரித்தனா். அதில் அவா் சகாயலூா்து கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இசக்கித்துரை (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT