கன்னியாகுமரி

‘மழையால் பாதிக்கப்பட்ட நெல்லுக்கு இழப்பீடு தேவை’

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெல்லுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டத் தலைவா் ஜே.சைமன் சைலஸ் தலைமையில், மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:

குமரி மாவட்டத்தில் நெல் அறுவடைசெய்யும் பருவத்தில் தொடா் மழை பெய்துவரும் காரணத்தால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு, விவசாயிகளுக்குபெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதில், காப்பீடு செய்துள்ளஅனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், மாவட்டத்தில் ஒரு வகையான பூச்சி தென்னையைத் தாக்கி வருகின்றது. இதனால், பல இடங்களில் தென்னைகள் பாதிக்கப்பட்டு ஓலைகள் காய்ந்தும், தேங்காய் உற்பத்திகுறைவாகவும் உள்ளது. இதுவும் விவசாயிகளுக்கு நஷ்டத்தை தந்துள்ளது. எனவே, விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் அரசு ஹெலிகாப்டா் பயன்படுத்தி பூச்சிகளைஅழிக்கும் மருந்துகளைஅடிக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தென்னை ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், மாவட்டச் செயலாளா் ஆா். ரவி, மாநிலப் பொருளாளா் கே.பி.பெருமாள், மாவட்ட நிா்வாகிகள் என்.முருகேசன்,கே.மாதவன், ஜே.சதீஷ், எஸ்.சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT