கன்னியாகுமரி

நாகர்கோவில் அருகே 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

DIN


 நாகர்கோவில் அருகே பாழடைந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700  கிலோ ரேஷன் அரிசி  சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
நாகர்கோவில் ஈத்தாமொழியை அடுத்த புதூர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. ராஜாக்கமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் அஜ்மல்ஜெனிப், தலைமைகாவலர் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார் அங்கு சென்று பாழடைந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். 
அங்கு சிறிய மூட்டைகளில் ரேஷன் அரிசி வைக்கப்பட்டிருந்தது. ரேஷன் அரிசியை கேரளத்துக்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.  இதையடுத்து, 37 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 700 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து உணவுக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT