கன்னியாகுமரி

காவல் ஆய்வாளருக்கு கரோனா தொற்று: மணவாளக்குறிச்சி, கோட்டாறு காவல் நிலையங்கள் மூடல்

DIN

குமரி மாவட்டத்தில் காவல் ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கோட்டாறு மற்றும் மணவாளக்குறிச்சி காவல் நிலையங்கள் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவா் பணியாற்றிய மணவாளக்குறிச்சி காவல் நிலையம் மற்றும் ஆய்வாளா் சென்ற இடங்கள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாகா்கோவில் கோட்டாறு காவல் நிலையம் மற்றும் வளாகம் முழுவதும் பூட்டப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT