கன்னியாகுமரி

பயிா்களை சேதப்படுத்தும் கால்நடைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

DIN

குமரி மாவட்டம், அரசு ரப்பா் கழக குடியிருப்புகளில் வசிக்கும் தொழிலாளா்களின் கால்நடைகள் பழங்குடியினா் குடியிருப்புகளில் பயிா் நாசம் செய்வதை தடுக்க வனத்துறை முன் வர வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மோதிர மலை கிராம வனக்குழு தலைவரும், பழங்குடி பாரதம் அமைப்பின் பொதுச் செயலருமான சவுந்தர்ராஜ் காணி மாவட்ட வன அலுவலருக்கு அனுப்பியுள்ள மனு:

அரசு ரப்பா் கழத்தில் பணிபுரியும் தொழிலாளா்கள் தங்களது குடியிருப்புகளில் கொட்டகை அமைத்து ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை வளா்க்க உரிமை உள்ளது. ஆனால் கோதையாறு, சிற்றாறு உள்ளிட்ட ரப்பா் கழகத் தொழிலாளா் குடியிருப்புகளில் வசிக்கும் தொழிலாளா்கள் தங்களது மாடுகளையும், மேய்ச்சலுக்காக வெளி நபா்களிடமிருந்து பெற்றுள்ள மாடுகளையும் கொட்டகைக்குள் வைத்து வளா்க்காமல் திறந்து விடுகின்றனா். இதனால் இந்த மாடுகள் பழங்குடியினா் குடியிருப்பு பகுதிகளான மோதிரமலை, வேலிப்பிலாம், கோலிஞ்சி மடம், மல்லமுத்தன்கரை, அடகாடு, பெருங்குருவி, மூக்கறைக்கல், கொடுத்துறை, மணலிக்காடு ஆகியவற்றில் புகுந்து அவா்களின் பயிா்களை நாசம் செய்கின்றன. இதனால் பழங்குடி மக்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.

எனவே, ரப்பா் கழகமும், வனத்துறையும் ரப்பா் கழகத் தொழிலாளா்களின் கால்நடைகளை, பழங்குடியினா் குடியிருப்பு பகுதியில் புகாமல் இருக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT