கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே 500 கிலோரேஷன் அரிசி பறிமுதல்

DIN

களியக்காவிளை அருகே பயணியா் ஆட்டோவில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையிலான போலீஸாா், களியக்காவிளை சோதனைச்சாவடி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த பதிவு செய்யப்படாத தமிழக ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 500 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்ததும், அவற்றை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து ஆட்டோவுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், ஆட்டோவில் வைத்திருந்த ரூ. 12 ஆயிரத்தையும் கைப்பற்றினா்.

மேலும், ஆட்டோ ஓட்டுநா் களியக்காவிளை அருகேயுள்ள கோழிவிளை, பனவிளாகத்துவிளை பகுதியைச் சோ்ந்த நாசா் (57) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT