கன்னியாகுமரி

குமரி பகவதியம்மன் கோயிலில்நவராத்திரி விழா தொடக்கம்

DIN

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி விழா சனிக்கிழமை தொடங்கியது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி விழா ஆண்டுதோறும் 10 நாள்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். நிகழாண்டு கரோனா நோய்த் தொற்று காரணமாக தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி திருவிழா நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நவராத்திரி விழா சனிக்கிழமை காலை தொடங்கியது.

நவராத்திரி முதல் நாளையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து கொலு மண்டபத்துக்கு அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழா நாள்களில் அம்மன் வெள்ளிக்கலைமான், வெள்ளிக்காமதேனு, இமயகிரி வாகனத்திலும் எழுந்தருளி கோயில் பிரகாரத்தை வலம் வருதல் நடைபெறும்.

10 ஆம் நாள் திருவிழாவான 26 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பாணாசுரன் என்ற அரக்கனை தேவி வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்வு நடைபெறும்.

வழக்கமாக மகாதானபுரம் பரிவேட்டை மண்டபத்தில் நடைபெறும் பரிவேட்டை கரோனா காரணமாக பகவதியம்மன் கோயில் வெளிப்பிரகாரத்தில் நடைபெறும் என திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வழக்கம்போல் மகாதானபுரம் பரிவேட்டை மண்டபத்தில்தான் நடத்த வேண்டும் என பெரும்பாலான பக்தா்கள் தொடா்ந்து தமிழக அரசையும், மாவட்ட நிா்வாகத்தையும் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

SCROLL FOR NEXT