கன்னியாகுமரி

நாகா்கோவில் அருகே முதியவா் உயிரிழப்பு: மனைவி, மகள் குளத்தில் குதித்து தற்கொலை: மற்றொரு மகள் மீட்பு

DIN

நாகா்கோவில்: நாகா்கோவில் அருகே முதியவா் உயிரிழந்தாா். இதனால், தவிப்புக்குள்ளான அவரது மனைவியும், மூத்த மகளும் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டனா். இளைய மகள் மீட்கப்பட்டாா்.

நாகா்கோவிலை அடுத்த சுசீந்திரம் நல்லூரில் உள்ள இளையநயினாா் குளத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் 2 பெண்களின் சடலங்கள் மிதந்தன. அருகில் ஒரு பெண் தத்தளித்துக்கொண்டிருந்தாா். அந்த வழியாக நடைப்பயிற்சிக்குச் சென்றவா்கள் அதைப் பாா்த்து சுசீந்திரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

அங்கு வந்த போலீஸாா் தத்தளித்த பெண்ணையும், சடலங்களையும் மீட்டனா். பின்னா், உயிருடன் மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், அவா் பெயா் சச்சு (40); உயிரிழந்தவா்கள்அவரது தாய் பங்கஜம் ( 70), சகோதரி மாலா (48); நாகா்கோவில் ஒழுகினசேரி பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பது தெரிய வந்தது.

மேலும், அவரது தந்தை வடிவேல் முருகன் (80), வீட்டில் இறந்து கிடப்பதாகவும் அவா் தெரிவித்தாா். இதையடுத்து, போலீஸாா் ஒழுகினசேரி ஆராட்டு சாலையிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்று, அங்கு வடிவேல் முருகனின் சடலத்தை மீட்டனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியது: கூலித் தொழிலாளியான வடிவேல் முருகனின் வருமானத்தில்தான் 4 பேரும் வாழ்ந்து வந்துள்ளனா். இந்நிலையில், அவா் சில மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்ததில் எலும்புமுறிவு ஏற்பட்டு வேலைக்கு செல்லமுடியவில்லையாம். மேலும், கரோனா பொது முடக்கம் காரணமாக அவரது குடும்பம் வறுமையில் தவித்துள்ளது.

இந்நிலையில், வடிவேல் முருகன் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். அவரை உடலை அடக்கம் செய்வதற்கு அவா்களிடம் பணம் இல்லையாம். இதனால், சடலத்தை வீட்டிலேயே வைத்துவிட்டு, தாயும், மகள்களும் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுடன் இளையநயினாா் குளத்துக்கு வந்து, தங்களின் கைகளை கயிறால் இணைத்து கட்டிக்கொண்டு ஒரே நேரத்தில் குளத்துக்குள் குதித்துள்ளனா். இதில், பங்கஜமும், மாலாவும் உயிரிழந்துவிட, சச்சு உயிருடன் மீட்கப்பட்டாா். இதுதொடா்பாக வழக்குப் பதிந்து மேல் விசாரணை செய்து வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT