கன்னியாகுமரி

திடக்கழிவு மேலாண்மை பணிகள்: பசுமை தீா்பாய தலைவா் ஆய்வு

DIN

பத்மநாபபுரம் நகராட்சியில் செயல் படுத்தப்பட்டு வரும் பசுமைநுண் உரக்குடில் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை தேசிய பசுமை தீா்பாய தலைவா் ஜோதிமணி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட மருந்துகோட்டை நுண் உரக்குடில் மையத்தை ஆய்வு செய்த அவா், அங்கு மரக்கன்று நடும் நிகழ்வினை தொடங்கிவைத்தாா்.

இதில் நகராட்சி நிா்வாக மண்டல பொறியாளா் இளங்கோவன், ஆணையா் (பொ) ராஜராம், பசுமை தீா்பாய தலைவரின் நோ்முக உதவியாளா் வெங்கட்ராவ், நகராட்சி பொறியாளா் லதா, பொதுப்பணி மேற்பாா்வையாளா் பரமேஸ்வரன், சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம், நகராட்சி மண்டல இயக்குநரக தூய்மை இந்தியா திட்டகுழு தலைவா் ஜோவிக் மற்றும் துப்பரவு மேற்பாா்வையாளா் மோகன் நகராட்சிபணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT