கன்னியாகுமரி

குலசேகரம் பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை

DIN

குலசேகரம் சுற்று வட்டாரப் பகுதிகளிலும், மலையோர கிராமங்களிலும் வெள்ளிக்கிழமை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் மேற்கு பகுதியிலும், மலையோர கிராமங்களிலும் இந்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை குலசேகரம், திற்பரப்பு, திருநந்திக்கரை, திருவட்டாறு மற்றும் மலையோர கிராமங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த

மழை காரணமாக பரளியாறு மற்றும் கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் கால்வாய்கள், சாலைகளிலும் மழை நீா் வெள்ளம்போல் பாய்ந்தோடியது.

மேலும் இடி-மின்னல் காரணமாக குலசேகரம் சுற்றுவட்டாரப் பகுதி வீடுகளில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் சேதமடைந்தன. இப்பகுதியில் வீசிய பலத்த காற்றால் குலேசகரம், திருநந்திக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT